Wednesday, September 30, 2020

80. கற்றாங் கெரியோம்பிக் கலியை

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

80. கற்றாங் கெரியோம்பிக் கலியை


திருச்சிற்றம்பலம்


கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே.  1
பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
பிறப்பில் பெருமானைப் பின்தாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே.  2 
மையா ரொண்கண்ணார் மாட நெடுவீதிக்
கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள்
பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச்
செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.  3 
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப்
பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே.  4 
செல்வ நெடுமாடஞ் சென்று சேண்ஓங்கிச்
செல்வ மதிதோயச் செல்வம் உயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.  5 
வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந்
திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய
கருமான் உரியாடைக் கறைசேர் கண்டத்தெம்
பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.  6 
அலையார் புனல்சூடி யாகத் தொருபாகம்
மலையான் மகளோடு மகிழ்ந்தான் உலகேத்தச்
சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே.  7 
கூர்வாள் அரக்கன்றன் வலியைக் குறைவித்துச்
சீரா லேமல்கு சிற்றம் பலமேய
நீரார் சடையானை நித்த லேத்துவார்
தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே.  8 
கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான்
சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலம்ஏத்த
மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.  9 
பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே
சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.  10 
ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன்
சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய
சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை
கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.    11

சுவாமி : ஆனந்த நடராஜர்; அம்பாள் : சிவகாமசுந்தரி. 


திருச்சிற்றம்பலம்

79. அயிலுறு படையினர் விடையினர்

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

79. அயிலுறு படையினர் விடையினர்


திருச்சிற்றம்பலம்


அயிலுறு படையினர் விடையினர் முடிமேல் அரவமும் மதியமும் விரவிய அழகர் மயிலுறு சாயல வனமுலை யொருபால் மகிழ்பவர் வானிடை முகில்புல்கு மிடறர் பயில்வுறு சரிதையர் எருதுகந் தேறிப் பாடியும் ஆடியும் பலிகொள்வர் வலிசேர் கயிலையும் பொதியிலும் இடமென வுடையார் கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  1
கொண்டலும் நீலமும் புரைதிரு மிடறர்
கொடுமுடி யுறைபவர் படுதலைக் கையர்
பண்டலர் அயன்சிரம் அரிந்தவர் பொருந்தும் 
படர்சடை யடிகளார் பதியத னயலே
வண்டலும் வங்கமுஞ் சங்கமுஞ் சுறவும் 
மறிகடல் திரைகொணர்ந் தெற்றிய கரைமேற்
கண்டலுங் கைதையும் நெய்தலுங் குலவுங் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  2 
எண்ணிடை யொன்றினர் இரண்டினர் உருவம்
எரியிடை மூன்றினர் நான்மறை யாளர்
மண்ணிடை ஐந்தினர் ஆறினர் அங்கம்
வகுத்தனர் ஏழிசை யெட்டிருங் கலைசேர்
பண்ணிடை யொன்பதும் உணர்ந்தவர் பத்தர்
பாடிநின் றடிதொழ மதனனை வெகுண்ட
கண்ணிடைக் கனலினர் கருதிய கோயில்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  3 
எரியொரு கரத்தினர் இமையவர்க் கிறைவர்
ஏறுகந் தேறுவர் நீறும்மெய் பூசித்
திரிதரு மியல்பினர் அயலவர் புரங்கள்
தீயெழ விழித்தனர் வேய்புரை தோளி
வரிதரு கண்ணிணை மடவர லஞ்ச
மஞ்சுற நிமிர்ந்ததோர் வடிவொடும் வந்த
கரியுரி மருவிய அடிகளுக் கிடமாங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  4 
ஊரெதிர்ந் திடுபலி தலைகல னாக
உண்பவர் விண்பொலிந் திலங்கிய வுருவர்
பாரெதிர்ந் தடிதொழ விரைதரு மார்பிற்
படஅர வாமைஅக் கணிந்தவர்க் கிடமாம்
நீரெதிர்ந் திழிமணி நித்திலம் முத்தம்
நிரைசுரி சங்கமொ டொண்மணி வரன்றிக்
காரெதிர்ந் தோதம்வன் றிரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  5 
முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி
முடியுடை யமரர்கள் அடிபணிந் தேத்தப்
பின்னிய சடைமிசைப் பிறைநிறை வித்த 
பேரரு ளாளனார் பேணிய கோயில்
பொன்ணியல் நறுமலர் புனலொடு தூபஞ் 
சாந்தமும் ஏந்திய கையின ராகிக்
கன்னியர் நாடொறும் வேடமே பரவுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  6 
கொலைக்கணித் தாவரு கூற்றுதை செய்தார்
குரைகழல் பணிந்தவர்க் கருளிய பொருளின்
நிலைக்கணித் தாவர நினையவல் லார்தம்
நெடுந்துயர் தவிர்த்தவெம் நிமலருக் கிடமாம்
மலைக்கணித் தாவர வன்றிரை முரல
மதுவிரி புன்னைகள் முத்தென அரும்பக்
கலைக்கணம் கானலின் நீழலில் வாழுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  7 
புயம்பல வுடையதென் இலங்கையர் வேந்தன்
பொருவரை யெடுத்தவன் பொன்முடி திண்தோள்
பயம்பல படஅடர்த் தருளிய பெருமான்
பரிவொடு மினிதுறை கோயில தாகும்
வியன்பல விண்ணினும் மண்ணினு மெங்கும் 
வேறுவே றுகங்களிற் பெயருள தென்னக்
கயம்பல படக்கடல் திரைகரைக் கெற்றுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  8 
விலங்கலொன் றேந்திவன் மழைதடுத் தோனும்
வெறிகமழ் தாமரை யோனுமென் றிவர்தம்
பலங்களால் நேடியும் அறிவரி தாய
பரிசினன் மருவிநின் றினிதுறை கோயில்
மலங்கிவன் றிரைவரை யெனப்பரந் தெங்கும்
மறிகட லோங்கிவெள் இப்பியுஞ் சுமந்து
கலங்கடஞ் சரக்கொடு நிரக்கவந் தேறுங்
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  9 
ஆம்பல தவமுயன் றறவுரை சொல்லும்
அறிவிலாச் சமணருந் தேரருங் கணிசேர்
நோம்பல தவமறி யாதவர் நொடிந்த
மூதுரை கொள்கிலா முதல்வர்தம் மேனிச்
சாம்பலும் பூசிவெண் டலைகல னாகத்
தையலா ரிடுபலி வையகத் தேற்றுக்
காம்பன தோளியொ டினிதுறை கோயில் 
கழுமலம் நினையநம் வினைகரி சறுமே.  10 
கலிகெழு பாரிடை யூரென வுளதாங்
கழுமலம் விரும்பிய கோயில்கொண் டவர்மேல்
வலிகெழு மனம்மிக வைத்தவன் மறைசேர் 
வருங்கலை ஞானசம் பந்தன தமிழின்
ஒலிகெழு மாலையென் றுரைசெய்த பத்தும் 
உண்மையி னால்நினைந் தேத்தவல் லார்மேல்
மெலிகெழு துயரடை யாவினை சிந்தும்
விண்ணவ ராற்றலின் மிகப்பெறு வாரே.    11

சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்; அம்பாள் : பெரியநாயகி.   

திருச்சிற்றம்பலம்

78. வரிவள ரவிரொளி

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

78. வரிவள ரவிரொளி

திருச்சிற்றம்பலம்

வரிவள ரவிரொளி யரவரை தாழ
வார்சடை முடிமிசை வளர்மதி சூடிக்
கரிவளர் தருகழல் கால்வல னேந்திக் 
கனலெரி யாடுவர் காடரங் காக
விரிவளர் தருபொழில் இளமயில் ஆல 
வெண்ணிறத் தருவிகள் திண்ணென வீழும்
எரிவள ரினமணி புனமணி சாரல் 
இடைச்சுர மேவிய இவர்வண மென்னே  1 
ஆற்றையும் ஏற்றதோர் அவிர்சடை யுடையர் 
அழகினை யருளுவர் குழகல தறியார்
கூற்றுயிர் செகுப்பதோர் கொடுமையை யுடையர்
நடுவிரு ளாடுவர் கொன்றையந் தாரார்
சேற்றயல் மிளிர்வன கயலிள வாளை
செருச்செய வோர்ப்பன செம்முக மந்தி
ஏற்றையொ டுழிதரும் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே.  2 
கானமுஞ் சுடலையுங் கற்படு நிலனுங்
காதலர் தீதிலர் கனல்மழு1 வாளர்
வானமும் நிலமையும்2 இருமையு மானார் 
வணங்கவும் இணங்கவும் வாழ்த்தவும் படுவார்
நானமும் புகையொளி விரையொடு கமழ
நளிர்பொழில் இளமஞ்ஞை மன்னிய பாங்கர்
ஏனமும் பிணையலும் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே.  3 
கடமணி மார்பினர் கடல்தனி லுறைவார்
காதலர் தீதிலர் கனல்மழு வாளர்
விடமணி மிடறினர் மிளிர்வதோர் அரவர் 
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
வடமுலை யயலன கருங்குருந் தேறி
வாழையின் தீங்கனி வார்ந்துதேன் அட்டும்
இடமுலை யரிவையர் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே.  4 
கார்கொண்ட கடிகமழ் விரிமலர்க் கொன்றைக்
கண்ணியர் வளர்மதி கதிர்விடக் கங்கை
நீர்கொண்ட சடையினர் விடையுயர் கொடியர் 
நிழல்திகழ் மழுவினர் அழல்திகழ் நிறத்தர்
சீர்கொண்ட மென்சிறை வண்டுபண் செய்யும்
செழும்புன லனையன செங்குலை வாழை
ஏர்கொண்ட பலவினொ டெழில்திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே.  5 
தோடணி குழையினர் சுண்ணவெண் ணீற்றர் 
சுடலையின் ஆடுவர் தோலுடை யாகப்
பீடுயர் செய்ததோர் பெருமையை யுடையர்
பேயுடன் ஆடுவர் பெரியவர் பெருமான்
கோடல்கள் ஒழுகுவ முழுகுவ தும்பி
குரவமும் மரவமும் மன்னிய பாங்கர்
ஏடவிழ் புதுமலர் கடிகமழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே.  6 
கழல்மல்கு காலினர் வேலினர் நூலர்
கவர்தலை யரவொடு கண்டியும் பூண்பர்
அழல்மல்கும் எரியொடும் அணிமழு வேந்தி 
ஆடுவர் பாடுவர் ஆரணங் குடையர்
பொழில்மல்கு நீடிய அரவமு மரவம் 
மன்னிய கவட்டிடைப் புணர்குயி லாலும்
எழில்மல்கு சோலையில் வண்டிசை பாடும்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே.  7 
தேங்கமழ் கொன்றையந் திருமலர் புனைவார்
திகழ்தரு சடைமிசைத் திங்களுஞ் சூடி
வீந்தவர் சுடலைவெண் ணீறுமெய் பூசி
வேறுமோர் சரிதையர் வேடமும் உடையர்
சாந்தமும் அகிலொடு முகில்பொதிந் தலம்பித் 
தவழ்கன மணியொடு மிகுபளிங் கிடறி
ஏந்துவெள் ளருவிகள் எழில்திகழ் சாரல்
இடைச்சுரம மேவிய இவர்வண மென்னே.  8 
பலஇலம் இடுபலி கையிலொன் றேற்பர்
பலபுக ழல்லது பழியிலர் தாமும்
தலையிலங் கவிரொளி நெடுமுடி யரக்கன் 
தடக்கைகள் அடர்த்ததோர் தன்மையை யுடையர்
மலையிலங் கருவிகள் மணமுழ வதிர
மழைதவழ் இளமஞ்ஞை மல்கிய சாரல்
இலைஇல வங்கமும் ஏலமுங் கமழும்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே.  9 
பெருமைகள் தருக்கியோர் பேதுறு கின்ற
பெருங்கடல் வண்ணனும் பிரமனும் ஓரா
அருமைய ரடிநிழல் பரவிநின் றேத்தும்
அன்புடை யடியவர்க் கணியரு மாவர்
கருமைகொள் வடிவொடு சுனைவளர் குவளைக் 
கயலினம் வயல்இள வாளைகள்இரிய
எருமைகள் படிதர இளஅனம் ஆலும்
இடைச்சுரம் மேவிய இவர்வண மென்னே.  10 
மடைச்சுர மறிவன வாளையுங் கயலும்
மருவிய வயல்தனில் வருபுனற் காழிச்
சடைச்சுரத் துறைவதோர் பிறையுடை யண்ணல் 
சரிதைகள் பரவிநின் றுருகுசம் பந்தன்
புடைச்சுரத் தருவரைப் பூக்கமழ் சாரற்
புணர் மடநடையவர் புடையிடை யார்ந்த
இடைச்சுரம் ஏத்திய இசையொடு பாடல் 
இவைசொல வல்லவர் பிணியிலர்தாமே.

சுவாமி : ஞானபுரீஸ்வரர்; அம்பாள் : கோபரத்னாம்பிகை. 

 

திருச்சிற்றம்பலம்

77. பொன்றிரண் டன்ன புரிசடை

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

77. பொன்றிரண் டன்ன புரிசடை


திருச்சிற்றம்பலம்


பொன்றிரண் டன்ன புரிசடை புரளப் பொருகடற் பவளமொ டழல்நிறம் புரையக் குன்றிரண் டன்ன தோளுடை யகலங் குலாயவெண் ணூலொடு கொழும்பொடி யணிவர் மின்திரண் டன்ன நுண்ணிடை அரிவை மெல்லிய லாளையோர் பாகமாப் பேணி அன்றிரண் டுருவம் ஆயஎம் அடிகள் அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  1
தேனினும் இனியர் பாலன நீற்றர்
தீங்கரும் பனையர்தந் திருவடி தொழுவார்
ஊன்நயந் துருக உவகைகள் தருவார்
உச்சிமே லுறைபவர் ஒன்றலா தூரார்
வானக மிறந்து வையகம் வணங்க
வயங்கொள நிற்பதோர் வடிவினை யுடையார்
ஆனையின் உரிவை போர்த்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  2 
காரிரு ளுருவம் மால்வரை புரையக்
களிற்றின துரிவைகொண் டரிவைமே லோடி
நீருரு மகளை நிமிர்சடைத் தாங்கி
நீறணிந் தேறுகந் தேறிய நிமலர்
பேரரு ளாளர் பிறவியிற் சேரார் 
பிணியிலர் கேடிலர் பேய்க்கணஞ் சூழ
ஆரிருண் மாலை யாடும்எம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  3 
மைம்மலர்க் கோதை மார்பின ரெனவும் 
மலைமகள வளொடு மருவின ரெனவும்
செம்மலர்ப் பிறையுஞ் சிறையணி புனலுஞ் 
சென்னிமே லுடையரெஞ் சென்னிமே லுறைவார்
தம்மல ரடியொன் றடியவர் பரவத் 
தமிழ்ச்சொலும் வடசொலுந் தாள்நிழற் சேர
அம்மலர்க் கொன்றை யணிந்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  4 
விண்ணுலா மதியஞ் சூடின ரெனவும்
விரிசடை யுள்ளது வெள்ளநீ ரெனவும்
பண்ணுலாம் மறைகள் பாடின ரெனவும்
பலபுக ழல்லது பழியில ரெனவும்
எண்ணலா காத இமையவர் நாளும் 
ஏத்தர வங்களோ டெழில்பெற நின்ற
அண்ணலான் ஊர்தி ஏறும்எம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  5 
நீடிருஞ் சடைமேல் இளம்பிறை துளங்க
நிழல்திகழ் மழுவொடு நீறுமெய் பூசித்
தோடொரு காதினிற் பெய்துவெய் தாய
சுடலையி லாடுவர் தோலுடை யாகக்
காடரங் காகக் கங்குலும் பகலுங்
கழுதொடு பாரிடங் கைதொழு தேத்த
ஆடர வாட ஆடும்எம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  6 
ஏறுமொன் றேறி நீறுமெய் பூசி
இளங்கிளை அரிவையொ டொருங்குட னாகிக்
கூறுமொன் றருளிக் கொன்றையந் தாருங்
குளிரிள மதியமுங் கூவிள மலரும்
நாறுமல் லிகையும் எருக்கொடு முருக்கும் 
மகிழிள வன்னியும் இவைநலம் பகர
ஆறுமோர் சடைமேல் அணிந்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  7 
கச்சும்ஒள் வாளுங் கட்டிய வுடையர்
கதிர்முடி சுடர்விடக் கவரியுங் குடையும்
பிச்சமும் பிறவும் பெண்அணங் காய
பிறைநுத லவர்தமைப் பெரியவர் பேணப்
பச்சமும் வலியுங் கருதிய அரக்கன்
பருவரை யெடுத்ததிண் தோள்களை யடர்வித்
தச்சமும் அருளுங் கொடுத்தஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  8 
நோற்றலா ரேனும் வேட்டலா ரேனும்
நுகர்புகர் சாந்தமொ டேந்திய மாலைக்
கூற்றலா ரேனும் இன்னவா றென்றும் 
எய்தலா காததொ ரியல்பினை யுடையார்
தோற்றலார் மாலும் நான்முக முடைய 
தோன்றலும் அடியொடு முடியுறத் தங்கள்
ஆற்றலாற் காணா ராயஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  9 
வாதுசெய் சமணுஞ் சாக்கியப் பேய்கள்
நல்வினை நீக்கிய வல்வினை யாளர்
ஓதியுங் கேட்டும் உணர்வினை யிலாதார் 
உள்கலா காததோ ரியல்பினை யுடையார்
வேதமும் வேத நெறிகளு மாகி
விமலவே டத்தொடு கமலமா மதிபோல்
ஆதியும் ஈறும் ஆயஎம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சிகொண் டாரே.  10 
மைச்செறி குவளை தவளைவாய் நிறைய
மதுமலர்ப் பொய்கையிற் புதுமலர் கிழியப்
பச்சிற வெறிவயல் வெறிகமழ் காழிப்
பதியவர் அதிபதி கவுணியர் பெருமான்
கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக்
கருத்துடை ஞானசம் பந்தன தமிழ்கொண்
டச்சிறு பாக்கத் தடிகளை யேத்தும்
அன்புடை யடியவர் அருவினை யிலரே.    11

சுவாமி : அகத்தீஸ்வரர்; அம்பாள் : பாகம்பிரியாள்நாயகி.  
  

திருச்சிற்றம்பலம்

76. மலையினார் பருப்பதந்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

76. மலையினார் பருப்பதந்

திருச்சிற்றம்பலம்


மலையினார் பருப்பதந் துருத்திமாற் பேறு 
  மாசிலாச் சீர்மறைக் காடுநெய்த் தானம்
நிலையினான் எனதுரை தனதுரை யாக 
  நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கலையினார் மடப்பிணை துணையொடுந் துயிலக் 
  கானலம் பெடைபுல்கிக் கணமயி லாலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்     
  இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.  1 
திருமலர்க் கொன்றையான் நின்றியூர் மேயான் 
  தேவர்கள் தலைமகன் திருக்கழிப் பாலை
நிருமலன் எனதுரை தனதுரை யாக 
  நீறணிந் தேறுகந் தேறிய நிமலன்
கருமலர்க் கமழ்சுனை நீள்மலர்க் குவளை 
  கதிர்முலை யிளையவர் மதிமுகத் துலவும்
இருமலர்த் தண்பொய்கை இலம்பையங் கோட்டூர்
  இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.  2 
பாலனாம் விருத்தனாம் பசுபதி தானாம் 
  பண்டுவெங் கூற்றுதைத் தடியவர்க் கருளும்
காலனாம் எனதுரை தனதுரை யாகக் 
  கனலெரி அங்கையில் ஏந்திய கடவுள்
நீலமா மலர்ச்சுனை வண்டுபண் செய்ய 
  நீர்மலர்க் குவளைகள் தாதுவிண் டோங்கும்
ஏலம்நா றும்பொழில் இலம்பையங் கோட்டூர்
  இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.  3 
உளங்கொள்வார் உச்சியார் கச்சியே கம்பன் 
  ஒற்றியூ ருறையும்அண் ணாமலை யண்ணல்
விளம்புவான் எனதுரை தனதுரை யாக 
  வெள்ளநீர் விரிசடைத் தாங்கிய விமலன்
குளம்புறக் கலைதுள மலைகளுஞ் சிலம்பக் 
  கொழுங்கொடி யெழுந்தெங்குங் கூவிளங் கொள்ள
இளம்பிறை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர் 
  இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.  4 
தேனுமாய் அமுதமாய்த் தெய்வமுந் தானாய்த் 
  தீயொடு நீருடன் வாயுவாந் தெரியில்
வானுமாம் எனதுரை தனதுரை யாக 
  வரிஅரா வரைக்கசைத் துழிதரு மைந்தன்
கானமான் வெருவுறக் கருவிர லூகங் 
  கடுவனோ டுகளுமூர் கற்கடுஞ் சாரல்
ஏனமான் உழிதரும் இலம்பையங் கோட்டூர்
  இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.  5 
மனமுலாம் அடியவர்க் கருள்புரி கின்ற 
  வகையலாற் பலிதிரிந் துண்பிலான் மற்றோர்
தனமிலான் எனதுரை தனதுரை யாகத் 
  தாழ்சடை யிளமதி தாங்கிய தலைவன்
புனமெலாம் அருவிகள் இருவிசேர் முத்தம் 
  பொன்னொடு மணிகொழித் தீண்டிவந் தெங்கும்
இனமெலாம் அடைகரை இலம்பையங் கோட்டூர்
  இருக்கையா பேணியென் எழில்கொள்வ தியல்பே.  6 
நீருளான் தீயுளான் அந்தரத் துள்ளான்
  நினைப்பவர் மனத்துளான் நித்தமா ஏத்தும்
ஊருளான் எனதுரை தனதுரை யாக
  ஒற்றைவெள் ளேறுகந் தேறிய வொருவன்
பாருளார் பாடலோ டாடல் அறாத
  பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
  இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.  7 
வேருலாம் ஆழ்கடல் வருதிரை யிலங்கை
வேந்தன தடக்கைகள் அடர்த்தவ னுலகில்
ஆருலாம் எனதுரை தனதுரை யாக
ஆகமோர் அரவணிந் துழிதரும் அண்ணல்
வாருலா நல்லன மாக்களுஞ் சார
வாரணம் உழிதரும் மல்லலங் கானல்
ஏருலாம் பொழிலணி இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.  8 
கிளர்மழை தாங்கினான் நான்முக முடையோன்
  கீழடி மேல்முடி தேர்ந்தளக் கில்லா
உளமழை யெனதுரை தனதுரை யாக
  வொள்ளழல் அங்கையி லேந்திய வொருவன்
வளமழை யெனக்கழை வளர்துளி சோர
  மாசுண முழிதரு மணியணி மாலை
இளமழை தவழ்பொழில் இலம்பையங் கோட்டூர்
  இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.  9 
உரிஞ்சன கூறைகள் உடம்பின ராகி
  உழிதரு சமணருஞ் சாக்கியப் பேய்கள்
பெருஞ்செல்வன் எனதுரை தனதுரை யாகப்
  பெய்பலிக் கென்றுழல் பெரியவர் பெருமான்
கருஞ்சினை முல்லைநன் பொன்னடை வேங்கை
  களிமுக வண்டொடு தேன்இனம் முரலும்
இருஞ்சுனை மல்கிய இலம்பையங் கோட்டூர்
  இருக்கையாப் பேணியென் எழில்கொள்வ தியல்பே.  10 
கந்தனை மலிகனை கடலொலி யோதங்
  கானலங் கழிவளர் கழுமலமென்னும்
நந்தியா ருறைபதி நால்மறை நாவன்
  நற்றமிழ்க் கின்துணை ஞானசம் பந்தன்
எந்தையார் வளநகர் இலம்பையங் கோட்டூர் 
  இசையொடு கூடிய பத்தும்வல் லார்போய்
வெந்துயர் கெடுகிட விண்ணவ ரோடும் 
  வீடுபெற் றிம்மையின் வீடெளி தாமே.    11

சுவாமி : அரம்பேஸ்வரர்; அம்பாள் : கனககுஜாம்பிகை.  
  

திருச்சிற்றம்பலம்


Friday, September 25, 2020

75. காலைநன் மாமலர்

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

75. காலைநன் மாமலர்

திருச்சிற்றம்பலம்


காலைநன் மாமலர் கொண்டடி பரவிக் கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன் ஓலம திடமுன் உயிரொடு மாள வுதைத்தவன் உமையவள் விருப்பன்எம் பெருமான் மாலைவந் தணுக ஓதம்வந் துலவி மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  1
பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்
  பிறையொடும் அரவினை யணிந்தழ காகப்
பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள் 
  பரமரெம் அடிகளார் பரிசுகள் பேணி
மண்ணினை மூடி வான்முக டேறி 
  மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து
விண்ணள வோங்கி வந்திழி கோயில் 
  வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  2 
ஓரியல் பில்லா வுருவம தாகி 
  யொண்திறல் வேடன துருவது கொண்டு
காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக் 
  கறுத்தவற் களித்துடன் காதல்செய் பெருமான்
நேரிசை யாக அறுபத முரன்று 
  நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து
வேரிக ளெங்கும் விம்மிய சோலை 
  வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே  3 
வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
  மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதங்
  கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்
பண்டிகழ் வாகப் பாடியொர் வேதம்
  பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும் 
  வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  4 
சடையினர் மேனி நீறது பூசித்
  தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக்
கடைதொறும் வந்து பலியது கொண்டு
  கண்டவர் மனமவை கவர்ந்தழ காகப்
படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி
  உமையவள் பாகமும் அமர்ந்தருள் செய்து
விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று
  வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  5 
கரைபொரு கடலில் திரையது மோதக்
  கங்குல்வந் தேறிய சங்கமும் இப்பி
உரையுடை முத்தம் மணலிடை வைகி
  ஓங்குவான் இருளறத் துரப்பஎண் டிசையும்
புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
  புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
  வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  6 
வல்லிநுண் இடையாள் உமையவள் தன்னை
  மருகிட வருமத களிற்றினை மயங்க
ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்
  கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்
நல்லறம் உரைத்து ஞானமோ டிருப்ப
  நலிந்திட லுற்று வந்தஅக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி
  வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  7 
பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்
  பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
  ஒளிதிகழ் வாளது கொடுத்தழ காய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தங்
  கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கைபொன் மலரார் விரைதரு கோயில்
  வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  8 
ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண
  அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச்
சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ்
  செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்
நீறுடைக் கோல மேனியர் நெற்றிக் 
  கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த
வேறெமை யாள விரும்பிய விகிர்தர்
  வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  9 
பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்
  பயில்தரு மறவுரை விட்டழ காக
ஏடுடை மலராள் பொருட்டுவன் தக்கன் 
  எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
  கண்டவர் வெருவுற விளித்துவெய் தாய
வேடுடைக் கோலம் விரும்பியவிகிர் தர்
  வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.  10 
விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
  வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை
நண்ணிய நூலன் ஞானசம் பந்தன்
  நவின்றஇவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்
பண்ணியல் பாகப் பத்திமை யாலே
  பாடியு ஆடியும் பயிலவல் லோர்கள்
விண்ணவர் விமானங் கொடுவர ஏறி
  வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே.    11

சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்; அம்பாள் : பெரியநாயகி.   

  திருச்சிற்றம்பலம்

74. நறவ நிறைவண் டறைதார்க் கொன்றை

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

74. நறவ நிறைவண் டறைதார்க் கொன்றை

திருச்சிற்றம்பலம்


நறவ நிறைவண் டறைதார்க் கொன்றை நயந்து நயனத்தால் சுறவஞ் செறிவண் கொடியோன் உடலம் பொடியா விழிசெய்தான் புறவம் உறைவண் பதியா மதியார் புரமூன் றெரிசெய்த இறைவன் அறவன் இமையோ ரேத்த உமையோ டிருந்தானே.  1
உரவன் புலியின் உரிதோ 
  லாடை யுடைமேற் படநாகம்  
விரவி விரிபூங் கச்சா 
  வசைத்த விகிர்தன் னுகிர்தன்னாற் 
பொருவெங் களிறு பிளிற 
  வுரித்துப் புறவம் பதியாக   
இரவும் பகலும் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  2 
பந்த முடைய பூதம் 
  பாடப் பாதஞ் சிலம்பார்க்கக் 
கந்த மல்கு குழலிகாணக் 
  கரிகாட் டெரியாடி  
அந்தண் கடல்சூழ்ந் தழகார் 
  புறவம் பதியா வமர்வெய்தி
எந்தம் பெருமான் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  3 
நினைவார் நினைய இனியான் 
  பனியார் மலர்தூய் நித்தலுங்   
கனையார் விடையொன் றுடையான் 
  கங்கை திங்கள் கமழ்கொன்றை
புனைவார் சடையின் முடியான் 
  கடல்சூழ் புறவம் பதியாக
எனையா ளுடையான் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  4 
செங்கண் அரவும் நகுவெண் 
  டலையும் முகிழ்வெண் திங்களுந் 
தங்கு சடையன் விடைய 
  னுடையன் சரிகோ வணஆடை  
பொங்கு திரைவண் கடல்சூழ்ந் 
  தழகார் புறவம் பதியாக  
எங்கும் பரவி இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  5 
பின்னு சடைகள் தாழக் 
  கேழல் எயிறு பிறழப்போய்  
அன்ன நடையார் மனைகள் 
  தோறும் அழகாற் பலிதேர்ந்து   
புன்னை மடலின் பொழில்சூழ்ந் 
  தழகார் புறவம் பதியாக 
என்னை யுடையான் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  6 
உண்ணற் கரிய நஞ்சை 
  யுண்டொ ருதோ ழந்தேவர்  
விண்ணிற் பொலிய அமுத 
  மளித்த விடைசேர் கொடியண்ணல்  
பண்ணிற் சிறைவண் டறைபூஞ் 
  சோலைப் புறவம் பதியாக
எண்ணிற் சிறந்த இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  7 
விண்தான் அதிர வியனார் 
  கயிலை வேரோ டெடுத்தான்றன்  
திண்தோ ளுடலும் முடியு 
  நெரியச் சிறிதே யூன்றிய
புண்தான் ஒழிய அருள்செய் 
  பெருமான் புறவம் பதியாக
எண்தோ ளுடையான் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  8 
நெடியான் நீள்தா மரைமே 
  லயனும் நேடிக் காண்கில்லாப்
படியா மேனி யுடையான் 
  பவள வரைபோல் திருமார்பிற்
பொடியார் கோலம் உடையான் 
  கடல்சூழ் புறவம் பதியாக   
இடியார் முழவார் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  9 
ஆலும் மயிலின் பீலி 
  யமணர் அறிவில் சிறுதேரர்  
கோலும் மொழிகள் ஒழியக் 
  குழுவுந் தழலும் எழில்வானும்   
போலும் வடிவும் உடையான் 
  கடல்சூழ் புறவம் பதியாக   
ஏலும் வகையால் இமையோ 
  ரேத்த உமையோ டிருந்தானே.  10 
பொன்னார் மாட நீடுஞ் 
  செல்வப் புறவம் பதியாக   
மின்னா ரிடையாள் உமையா 
  ளோடும் இருந்த விமலனைத்
தன்னார் வஞ்செய் தமிழின் 
  விரகன் உரைத்த தமிழ்மாலை
பன்னாள் பாடி யாடப் 
  பிரியார் பரலோ கந்தானே.    11

சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்; அம்பாள் : பெரியநாயகி.  

திருச்சிற்றம்பலம்

Monday, September 14, 2020

73. வானார்சோதி மன்னுசென்னி

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

73. வானார்சோதி மன்னுசென்னி


திருச்சிற்றம்பலம்


வானார்சோதி மன்னுசென்னி 
  வன்னிபு னங்கொன்றைத்
தேனார்போது தானார்கங்கை 
  திங்க ளொடுசூடி
மானேர்நோக்கி கண்டங்குவப்ப 
  மாலை யாடுவார்
கானூர்மேய கண்ணார்நெற்றி 
  ஆன்ஊர் செல்வரே.  1 
நீந்தலாகா வெள்ளமூழ்கு 
  நீள்சடை தன்மேலோர்
ஏய்ந்தகோணற் பிறையோடரவு 
  கொன்றை எழிலாரப்
போந்தமென்சொல் இன்பம்பயந்த 
  மைந்த ரவர்போலாம்
காந்தள்விம்மு கானூர்மேய 
  சாந்த நீற்றாரே.  2 
சிறையார்வண்டுந் தேனும்விம்மு 
  செய்ய மலர்க்கொன்றை
மறையார்பாட லாடலோடு 
  மால்விடை மேல்வருவார்
இறையார்வந்தென் இல்புகுந்தென் 
  எழில்நல முங்கொண்டார்
கறையார்சோலைக் கானூர்மேய 
  பிறையார் சடையாரே.  3 
விண்ணார்திங்கட் கண்ணிவெள்ளை 
  மாலை யதுசூடித்
தண்ணாரக்கோ டாமைபூண்டு 
  தழைபுன் சடைதாழ
எண்ணாவந்தென் இல்புகுந்தங் 
  கெவ்வ நோய்செய்தான்
கண்ணார்சோலைக் கானூர்மேய 
  விண்ணோர் பெருமானே.  4 
தார்கொள் கொன்றைக் 
  கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி
சீர்கொள்பாட லாடலோடு 
  சேட ராய்வந்து
ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் 
  னுள்வெந் நோய்செய்தார்
கார்கொள்சோலைக் கானூர்மேய 
  கறைக்கண் டத்தாரே.  5 
முளிவெள்ளெலும்பு நீறுநூலும் 
  மூழ்கு மார்பராய்
எளிவந்தார்போல் ஐயமென்றென் 
  இல்லே புகுந்துள்ளத்
தெளிவுநாணுங் கொண்டகள்வர் 
  தேற லார்பூவில்
களிவண்டியாழ்செய் கானூர்மேய 
  ஒளிவெண் பிறையாரே.  6 
மூவாவண்ணர் முளைவெண்பிறையர் 
  முறுவல் செய்திங்கே
பூவார்கொன்றை புனைந்துவந்தார் 
  பொக்கம் பலபேசிப்
போவார்போல மால்செய்துள்ளம் 
  புக்க புரிநூலர்
தேவார்சோலைக் கானூர்மேய 
  தேவ தேவரே.  7 
தமிழின்நீர்மை பேசித்தாளம் 
  வீணை பண்ணிநல்ல
முழவமொந்தை மல்குபாடல் 
  செய்கை யிடமோவார்
குமிழின்மேனி தந்துகோல 
  நீர்மை யதுகொண்டார்
கமழுஞ்சோலைக் கானூர்மேய 
  பவள வண்ணரே.  8 
அந்தமாதி அயனும்மாலும் 
  ஆர்க்கும் அறிவரியான்
சிந்தையுள்ளும் நாவின் மேலுஞ் 
  சென்னியு மன்னினான்
வந்தென்னுள்ளம் புகுந்துமாலை 
  காலை யாடுவான்
கந்தமல்கு கானூர்மேய 
  எந்தை பெம்மானே.  9 
ஆமையரவோ டேனவெண்கொம் 
  பக்கு மாலைபூண்
டாமோர்கள்வர் வெள்ளர்போல 
  உள்வெந் நோய்செய்தார்
ஓமவேத நான்முகனுங் 
  கோணாகணையானும்
சேமமாய செல்வர்கானூர் 
  மேய சேடரே.  10 
கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் 
  கானூர் மேயானைப்
பழுதில்ஞான சம்பந்தன்சொற் 
  பத்தும் பாடியே
தொழுதுபொழுது தோத்திரங்கள் 
  சொல்லித் துதித்துநின்
றழுதுநக்கும் அன்புசெய்வார் 
  அல்லல் அறுப்பாரே.    11

சுவாமி : செம்மேனிநாதர்; அம்பாள் : சிவலோகநாயகி.   
  

திருச்சிற்றம்பலம்

Sunday, September 13, 2020

72. வாரார் கொங்கை மாதோர்

 

 திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம்

72. வாரார் கொங்கை மாதோர்


திருச்சிற்றம்பலம்


வாரார் கொங்கை மாதோர் 
  பாக மாக வார்சடை
நீரார் கங்கை திங்கள் 
  சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார் மழுவொன் றேந்தி 
  யந்தண் குழகன் குடமூக்கில்
காரார் கண்டத் தெண்டோள் 
  எந்தை காரோ ணத்தாரே.  1 
முடியார் மன்னர் மடமான் 
  விழியார் மூவுல கும்மேத்தும்
படியார் பவள வாயார் 
  பலரும் பரவிப் பணிந்தேத்தக்
கொடியார் விடையார் மாட 
  வீதிக் குடந்தைக் குழகாரும்
கடியார் சோலைக் கலவ 
  மயிலார் காரோ ணத்தாரே.  2 
மலையார் மங்கை பங்கர் 
  அங்கை அனலர் மடலாரும்
குலையார் தெங்கு குளிர்கொள் 
  வாழை யழகார் குடமூக்கில்
முலையா ரணிபொன் முளைவெண் 
  நகையார் மூவா மதியினார்
கலையார் மொழியார் காதல் 
  செய்யுங் காரோ ணத்தாரே.  3 
போதார் புனல்சேர் கந்தம் 
  உந்திப் பொலியவ் வழகாரும்
தாதார் பொழில்சூழ்ந் தெழிலார் 
  புறவி லந்தண்குட மூக்கில்
மாதார் மங்கை பாக 
  மாக மனைகள் பலிதேர்வார்
காதார் குழையர் காள 
  கண்டர் காரோ ணத்தாரே.  4 
பூவார் பொய்கை அலர்தா 
  மரைசெங் கழுநீர் புறவெல்லாம்
தேவார் சிந்தை அந்த ணாளர் 
  சீரா லடிபோற்றக்
கூவார் குயில்கள் ஆலும் 
  மயில்கள் இன்சொற் கிளிப்பிள்ளை
காவார் பொழில்சூழ்ந் தழகார் 
  குடந்தைக் காரோ ணத்தாரே.  5 
மூப்பூர் நலிய நெதியார் 
  விதியாய் முன்னே அனல்வாளி
கோப்பார் பார்த்தன் நிலைகண் 
  டருளுங் குழகர் குடமூக்கில்
தீர்ப்பா ருடலில் அடுநோய 
  அவலம் வினைகள் நலியாமைக்
காப்பார் காலன் அடையா 
  வண்ணங் காரோணத்தாரே.  6 
ஊனார் தலைகை யேந்தி 
  யுலகம் பலிதேர்ந் துழல்வாழ்க்கை
மானார் தோலார் புலியி 
  னுடையார் கரியின் னுரிபோர்வை
தேனார் மொழியார் திளைத்தங் 
  காடித் திகழுங் குடமூக்கில்
கானார் நட்டம் உடையார் 
  செல்வக் காரோ ணத்தாரே.  7 
வரையார் திரள்தோள் மதவா 
  ளரக்கன் எடுப்ப மலைசேரும்
விரையார் பாதம் நுதியா 
  லூன்ற நெரிந்து சிரம்பத்தும்
உரையார் கீதம் பாடக் 
  கேட்டங் கொளிவாள் கொடுத்தாரும்
கரையார் பொன்னி சூழ்தண் 
  குடந்தைக் காரோ ணத்தாரே.  8 
கரிய மாலுஞ் செய்ய 
  பூமேல் அயனுங் கழறிப்போய்
அரிய அண்டந் தேடிப் 
  புக்கும் அளக்க வொண்கிலார்
தெரிய அரிய தேவர் 
  செல்வந் திகழுங் குடமூக்கில்
கரிய கண்டர் கால 
  காலர் காரோ ணத்தாரே.  9 
நாணார் அமணர் நல்ல 
  தறியார் நாளுங் குரத்திகள்
பேணார் தூய்மை மாசு 
  கழியார் பேச லவரோடும்
சேணார் மதிதோய் மாட 
  மல்கு செல்வ நெடுவீதிக்
கோணா கரமொன் றுடையார் 
  குடந்தைக் காரோ ணத்தாரே.  10 
கருவார் பொழில்சூழ்ந் தழகார் 
  செல்வக் காரோ ணத்தாரைத்
திருவார் செல்வம் மல்கு 
  சண்பைத் திகழுஞ் சம்பந்தன்
உருவார் செஞ்சொல் மாலையிவைபத் 
  துரைப்பா ருலகத்துக்
கருவா ரிடும்பைப் பிறப்ப 
  தறுத்துக் கவலை கழிவாரே.    11

சுவாமி : சோமநாதர்; அம்பாள் : சோமசுந்தரி.    

திருச்சிற்றம்பலம்

90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள்

  திருஞானசம்பந்தர் அருளிய தேவாரம் 90. அரனை உள்குவீர் – திருவிருக்குக்குறள் திருச்சிற்றம்பலம் அரனை உள்குவீர், பிரம னூருளெம் பரனை யேமனம், ...